Tuesday, September 7, 2010

நிதர்சனம்

அழகான காலை
மலையின் தலையைத் தட்டிச் செல்லும் மேகம்
எதிரே ஏரி, அதன் மேல்
காதலன் நுகரும் காதலி சேலை போல் பனி
கொஞ்சம் தேனீர், அருகே
அதை விட சூடாய் செய்திகள் தாங்கி தினசரி
பச்சைப் புல்வெளி, அங்கே
நீர் கீரீடம் தாங்கி நிற்கும் திமிரில் புற்கள்
குயிலின் ஓசை, அதில்
துணையைத் தேடும் எதிர்பார்ப்பு கூடவே கொஞ்சம் இறுமாப்பு
மெல்லிய காற்று, அதில்
ஏதோ இனம் பிரிக்க முடியா வாசம்
நியாயமாய் கவிதை வடிக்கத்தோன்றும் சூழல், ஆனால்
ஈனமாய் ஒரு குரல்
சோறு வடிச்சிருக்கேன் மாமா, சீக்கிரம் எந்திரிச்சு பொழப்புக்கு போ
கனவு கலைந்தது, வழக்கம் போல்.

No comments:

Post a Comment